பிக்பாஸ் பிரபலம் ஆரவ் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
பிக்பாஸ் பிரபலம் ஆரவ் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமான பிரபலமானவர் ஆரவ். இவர் தமிழில் தொடக்க கால பிக்பாஸ் சீசனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சீசன் டைட்டில் வின்னரும் இவர் தான், இவருக்கும் நடிகை ஓவியாவிற்கும் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஆரவ் சமீபத்தில் ஜோஷ்வா படத்தின் நடிகையை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரவ்வின் தந்தை நேற்று நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் இவருடைய ரசிகர்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது சொந்த ஊர் நாகர்கோயில் ஆகும். நல்லடக்கம் அந்த ஊரில் நடைபெறும் என கூறப்படுகிறது.