பிக்பாஸ்: பாலாஜி-ஆரி இருவரும் கூட்டு சேர்ந்தார்களா?

பிக்பாஸ்: பாலாஜி-ஆரி இருவரும் கூட்டு சேர்ந்தார்களா?;

Update: 2020-12-22 17:15 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய நிலையில்  அனிதா-ஆரிக்கு இடையே  வாக்குவாதங்கள் நடைபெற்ற போதிலும்,  இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

அதில் இன்றைய டாஸ்க்கில் பந்துகளை பிடிப்பதில் இரு அணிகளுக்கும் பிரச்சனை, ரியோ-ஆரி இடையே பிரச்சனை என நீண்டு கொண்டே உள்ளது. அதேபோல் இதே டாஸ்க்கில் சோம் மற்றும் பாலா இடையேயும் பிரச்சனை நிகழ்கிறது. பாலா தள்ளி விடுவதாக சோம் குற்றம் சாட்ட, அதற்கு பாலா விளக்கம் அளித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த டாஸ்க் குறித்து ஒரே அணியில் இருக்கும் ஆரி, பாலாஜி தனிமையில் இதுகுறித்து ஆலோசனை செய்தபோது, நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள், நான் முன்னாடி நின்று பந்து பிடிக்கின்றேன், "நான் போனால் அது இடிக்குது இது இடிக்குதுன்னு கம்ப்ளெண்ட் பண்றாங்க" என்று கூறுகிறார்.

அப்போது ஆரி, நானும் ரியோவும் அருகருகே நின்று கொண்டு இருக்கும்போது ரியோ ஒரு ஸ்டாட்டர்ஜியோடு விளையாடினார். முன்னாடி போ, முன்னாடி போ என்று கூறினார். அது என்னை டிஸ்டர்ப் பண்றதுக்கா அல்லது பேசி வச்சிட்டு பண்றாங்களான்னு தெரியலை என்று கூறுகிறார்.

அப்போது பாலாஜி எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வந்தால் எதுக்கு விளையாடனும் என்று சலிப்போடு கூறுவதோடு இன்றைய இரண்டாவது ப்ரோமோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரிச்சந்திரன் என்று ஒருவரை ஒருவர் கூறி சண்டை போட்டு கொண்ட ஆரி, பாலாஜி இப்போது ஒரே அணியில் ஒற்றுமையாக உள்ளதை பார்க்கும்போது குழப்பமாகவே உள்ளது என பார்வையாளர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


 

null


 

Similar News