#BigBoss3Promo - ஆஜித்தின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா அர்ச்சனா??

#BigBoss3Promo - ஆஜித்தின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா அர்ச்சனா??

Update: 2020-12-01 19:40 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சினைகள் நடந்தாலும் அதில் இருந்து ஒதுங்கி இருப்பவர் ஆஜித். மேலும் அமைதியாக இருக்கும் போட்டியாளர் என்று பலரும் கூறிகின்றனர். மேலும் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க்கில் ரியோ கேட்ட கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதில் கூறியதோடு டாஸ்க்கை முடித்த விதமும் ஆச்சரியமாக இருந்தது. இதற்காக ரியோவின் குரூப்பில் உள்ளவர்களே ஆஜித்தை பாராட்டினார்கள். 

இந்த நிலையில் இன்று அர்ச்சனாவிடம் ஆஜித் கேள்வி கேட்கும் கால்சென்டர் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் இந்த கேம் ஷோவில் நீங்கள் வரும்போது ஒரு வலிமையான போட்டியாளராக வந்தீர்கள். கமல் சார் அவர்களிடம் கூட நீங்கள் பேசும்போது நான் இன்னும் என்னுடைய நக்கல்களை காட்டவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் வரும்போது உங்களிடம் நிறைய நக்கல்கள் தெரிந்தது. ஆனால் போகப் போக அது குறைந்துவிட்டது போன்று எனக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது.

மேலும் அடிக்கடி நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆனால் டாஸ்க் எல்லாம் நான் பார்த்தவரைக்கும் நீங்கள் வேற லெவலில் செய்து வருகிறீர்கள். இப்போது என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான், நீங்கள் உண்மையிலேயே வீட்டுக்கு போக வேண்டுமா அல்லது இந்த ஷோவை வின் பண்ண வேண்டுமா என்ற கேள்வியை ஆஜித் எழுப்பியுள்ளார். ஆஜித்தின் இந்த கேள்விகளுக்கு அர்ச்சனா பதில் அளிப்பாரா என்று பார்க்கலாம்.

Similar News