பிக்பாஸ் ப்ரோமோ: ஆரியை எதிர்த்த பாலா - அடுத்த வாரம் நாமினேஷனில் வருவாரா?
பிக்பாஸ் ப்ரோமோ: ஆரியை எதிர்த்த பாலா - அடுத்த வாரம் நாமினேஷனில் வருவாரா?;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பலவிதமான டாஸ்க்குகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவருக்கும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. எனவே ஓவ்வொரு வெள்ளிக்கிழமை மோசமான மற்றும் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் தேர்வு செய்யப்படும் நிலையில் இன்று மோசமான பாலாவை ஆரி நாமினேட் செய்கிறார்.
பாலாஜி கேப்டனாக இருந்த போது நடந்த ஒரு விஷயத்தை கூற ஆரி முயலும் போதும், பாலாஜி இந்த வாரத்தை மட்டும் பேசுங்கள், போனவாரம் கேப்டன் ஆக நான் இருந்தபோது நடந்ததை இப்போது இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க, அதற்கு ஆரி நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை நீ சொல்ல தேவை இல்லை என்று பதிலளிக்கிறார். அப்போது திடீரென நீ வேண்டுமானாலும் வந்து சொல்றா என்று ஆரி கூறியதை அடுத்து ஆவேசமடைந்த பாலாஜி நீங்கள் ஒரு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அதை இதுவரை பொறுத்துகொண்டு இருந்தேன், இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது, வந்து சொல்றா என்றால் என்ன அர்த்தம் என்று பாலாஜி கேட்க இருவருக்கும் இடையே மோதல் ஆவேசமாகிறது.
ஆரியிடம் மோதுபவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில் ஒருவேளை அடுத்த வாரம் பாலாஜி நாமினேஷனில் சிக்கினால் அவரது ரசிகர்களால் டார்கெட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனில் சம்யுக்தா, அர்ச்சனா, அனிதா ஆகியோர் இவருடன் பிரச்சினையில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day89 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/TE53t7ac1Q
— Vijay Television (@vijaytelevision) January 1, 2021