பிக்பாஸ் ப்ரோமோ: பாலாஜி - ஷிவானி காதல் குறித்து பேசிய ஆரி - பதட்டத்தில் ஷிவானி.!

பிக்பாஸ் ப்ரோமோ: பாலாஜி - ஷிவானி காதல் குறித்து பேசிய ஆரி - பதட்டத்தில் ஷிவானி.!;

Update: 2020-11-27 15:54 GMT

பிக்பாஸ் சீசன்-4  ஆரம்பித்ததில் இருந்தே பல சண்டைகளும் பிரச்சினைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும்  போட்டியாளர்களுக்கு கால்சென்டர் டாஸ்க் என்று கொடுக்கப்பட்டுள்ளது.டாஸ்க் ஆரம்பித்ததிலிருந்து போட்டியாளர்கள் அனைவருக்கும் வாக்குவாதங்கள் தொடங்கின.

அந்த வகையில் இன்று  வந்த இரண்டாவது புரோமோவில் கால் செண்டர் டாஸ்க்கில் ஆரியிடம் சரியாக சிக்கிய ஷிவானி அவருடைய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஆரி,ஷிவானியிடம்  கேட்கும் கேள்விகள் இந்த வீட்டில அதிக நேரம் நீங்க யாரோட இருக்கிங்க. காதல் கண்ணை கட்டுதே அப்படின்னு சொன்னது நான் தான். கமல் சார் எபிசோட்ல வெளியில என்ன நடந்துச்சுன்னு கேட்டபோது பாலா உங்க பேரை தைரியமா முன்வந்து சொல்லலை உண்மையில் வெளியில என்ன நடந்துச்சு என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த ஆரி கடைசியில் நெற்றிப்போட்டில் வைத்தது போல் பாலா மேல நீங்க வச்சிருக்கிறது அன்பா-காதலா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரியின் கேள்விகளுக்கு  ஷிவானி அமைதியாக  இருந்தாலும் இன்றைய நிகழ்ச்சியில் அவர் எவ்வாறு பதில் அளிக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.அதனிடையே ப்ரோமோவில் பாலா கை தட்டுவது போன்று ப்ரோமோ முடிந்தது.

Similar News