பிக்பாஸ் ப்ரோமோ: சிவானிக்கு எதிராக களமிறங்கிய போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் ப்ரோமோ: சிவானிக்கு எதிராக களமிறங்கிய போட்டியாளர்கள்.!;

Update: 2020-12-17 17:30 GMT

பிக்பாஸ் போட்டியில் 70- நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் வகையில்  பல சுவாரசியமான நிகழ்வுகளும், பிரச்சினைகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் பங்கு கொள்வார்கள் என்பதும், சுவாரஸ்யம் இல்லாமல் செயல்பட்ட இருவர் ஓய்வு எடுக்கும் அறையான சிறையில் அடைக்கப்படுவதும் வழக்கம் இன்று வந்ந முதல் புரமோவில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்கள் குறித்த நாமினேஷன் செய்யப்பட்டதை பார்த்த நிலையில் தற்போது இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யம் இல்லாமல் செயல்பட்டவர்கள் குறித்த நாமினேஷன் செய்யப்படுகிறது.

இதில் ஆரி, ரியோ, சோம் ஆகியோர் ஷிவானியையும், அனிதா, ரம்யா, பாலாஜி, சோம் ஆகியோர்கள் கேப்ரில்லாவையும் நாமினேஷன் செய்கின்றனர். இதனையடுத்து ஷிவானி, கேபி ஆகிய இருவரும் ஓய்வு எடுக்கும் அறை என்னும் சிறைக்கு செல்கின்றனர்.இந்த நிலையில் தான் சிறைக்கு செல்வது குறித்து சிறைக்கு செல்லும் முன் ஷிவானி கூறியபோது 'நாமினேஷன் ஓகே ஆனால் குற்றச்சாட்டுகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை' என சற்றே கோபத்துடன் கூறுகிறார். 

இதனை அடுத்து இந்த வார கேப்டனான ரம்யா இருவரையும் சிறையில் அடைக்கும் காட்சியோடு இன்றைய இரண்டாம் புரோமோ முடிவுக்கு வருகிறது.இந்த வாரம் ஆரியுடன் அனிதா, அர்ச்சனா, கேபி, ரம்யா உள்ளிட்டோர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் அவர் சிறைக்கு செல்ல அதிக வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

null


 

Similar News