பிக்பாஸ் ப்ரோமோ: இந்த வாரம் யார் கேப்டன் தெரியுமா?

பிக்பாஸ் ப்ரோமோ: இந்த வாரம் யார் கேப்டன் தெரியுமா?;

Update: 2020-12-25 16:16 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் பலரும் யார் வெற்றியாளர்கள் என்று  அவர்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று வெளியான புரோமோவில் அடுத்த வாரத்திற்கான தலைவர் யார் என்பது குறித்த டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஆரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த வாரம் ஆரியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் மூன்றாவது வாரம் இறுதி போட்டி என்பதால் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்த தப்பித்த ஆரி கிட்ட தட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாகவே கருதப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் எவிக்ட் செய்யப்படுவார்.

இதனை அடுத்துள்ள 8 போட்டியாளர்களில் வாரம் இருவர் என வரும் இரண்டு வாரங்களில் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் அபிஜித் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

null


 

Similar News