பிக்பாஸ் ப்ரோமோ: பாலாஜி சொன்னது உண்மைதானா.?கேபி செய்த செயல்..!
பிக்பாஸ் ப்ரோமோ: பாலாஜி சொன்னது உண்மைதானா.?கேபி செய்த செயல்..!;
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய கால்சென்டர் டாஸ்க் இரண்டாவது நாளான இன்று சோம், கேபிக்கு போன் செய்வது போல ப்ரோமோ இருந்தது. அதன்படி நேற்று அர்ச்சனாவின் குரூப்பில் சோம், ரியோ மற்றும் கேபி இருப்பதாக பாலாஜி சொன்னதை இன்றைய டாஸ்க்கில் கேபி மற்றும் சோம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
அந்த வகையில் நேற்றைய டாஸ்க்கில் பிக்பாஸ் அறிவித்தது கால் சென்டர் ஊழியராக ஒவ்வொருவரும் காலராக பேச வேண்டும். இதில் கால்செண்டர் ஊழியரை வெறுப்பேற்றும் வகையில் பேசி அவரை போனை வைக்க செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க் அதனை கடைப்பிடித்து பாலாஜி-அர்ச்சனா மற்றும் சனம்-சம்யுக்தா ஆகியோரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார். பாலாஜியையும், சம்யுக்தாவையும் வெறுப்பேற்ற முடியாததால் அர்ச்சனா, சனம் இருவரும் அடுத்த வாரம் நாமினேட் ஆகினர்.தற்போது சோம்-கேபிக்கு போன் செய்தார். ஆனால் அவர்கள் இருவரும் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டனர்.ஒரு கட்டத்தில் போனை வைத்து விடுங்கள் என்று சோம் சொல்ல உடனே கேபி வைத்துவிட்டார் போனை வைத்து விட்டதால் அவர் நாமினேட் செய்யப்படுகிறார் என்பதனை சனம் உள்பட ஒருசிலர் சுட்டிக்காட்டியபோது ஆமாம் நாம் தெரிந்து தான் வைத்தேன் என்று கேபி கூறினார்.
இதனை அடுத்து சனம்ஷெட்டியிடம் பாலாஜி கூறியபோது நேற்று நான் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. பெஸ்ட் பிளேன்னு கொடுக்க ஒருகூட்டம் இருக்கு. அதனால் சோம் விளையாட மாட்றான் என்று கூறுகிறார் என்பதுபோல ப்ரோமோ முடிந்தது.இனி வரும் வாரங்களில் அர்ச்சனாவின் குரூப்புக்கு எதிராக போட்டியாளர்கள் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் நம்மளை முட்டாள் ஆக்குவது போல் விளையாடுகிறார்கள் என கமெண்ட்களை கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.