பிக்பாஸ் ப்ரோமோ: டைட்டில் வின்னர் பற்றிக் கூறிய கமலஹாசன்.!

பிக்பாஸ் ப்ரோமோ: டைட்டில் வின்னர் பற்றிக் கூறிய கமலஹாசன்.!;

Update: 2020-12-19 17:57 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76ஆவது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்று கமல் தோன்றும் நாள் என்பதால் இன்றைய முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் கூறியபோது: இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கின்றன ஒரு வெற்றியாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க. இந்த வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் விளையாட்டுகளை நேர்மையாக விளையாடுகிறார்களா என்பதை உங்கள் பிரதிநிதி ஆகிய நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

உங்கள் தேர்வின் சாயல்கள் இந்த வாரம் முதலே தெரிய ஆரம்பித்து விட்டதாக எனக்கு தோன்றுகிறது. உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது என்பதை பார்க்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

குறிப்பாக வெற்றியாளர் யார் என்ற உங்கள் உங்கள் தேர்வின் சாயல் தற்போது தெரிய ஆரம்பித்து விட்டதாக கமல்ஹாசன் கூறும்போது, ரம்யா, ஆரி, ரியோ ஆகிய மூவரின் காட்சிகள் புரமோவில் தெரிவதால் இவர்கள் மூவரில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்று கமல்ஹாசன் மறைமுகமாக கூறுகிறாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.


 

null


 

Similar News