பிக்பாஸ் ப்ரோமோ : ரம்யாவை வெளுத்து வாங்கிய கமலஹாசன்.!

பிக்பாஸ் ப்ரோமோ : ரம்யாவை வெளுத்து வாங்கிய கமலஹாசன்.!

Update: 2020-12-20 20:07 GMT

பிக்பாஸ் வீட்டில் இன்று 75-வது நாள்  கண்டு கொண்டிருக்கும் வகையில் கடந்த வாரம் ரம்யா கேப்டனாக இருந்த நிலையில் அவருடைய கேப்டன்சி எப்படி இருந்தது என கமல்ஹாசன் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்க அதற்கு பாலாஜி, லக்சரி டாஸ்க்கின்போது கேப்டனாக இருப்பவர் ஒரு உதாரணமாக இருந்து மற்றவர்களை வழி நடத்தியிருக்கலாம் என தோணியது என்று கூறினார்.

அர்ச்சனா கூறியபோது, வெசல் வாஷிங் டீமில் ரம்யாவால் கொஞ்சம் அசெளகரிகமாக இருந்தது என்று கூறினார். ஆரி கூறியபோது, ரம்யா என்னை ஒரு வார்த்தை பயன்படுத்தினார், அது எனக்கு மன வருத்தத்தை அளித்தது. கோழி டாஸ்க்கின்போது கேப்டன் என்ற முறையில் அவரிடம் முறையிட்டபோது நான் இப்ப கேப்டன் கிடையாது, நான் இப்ப டாஸ்க்கில் இருக்கின்றேன் என்று கூறியது அதிருப்தியாக இருந்தது என்றார்.

இதுகுறித்து கமல்ஹாசன் ரம்யாவிடம் ஒரு கேப்டனாக நீங்கள் தான் எடுத்து அனைவரிடமும் சொல்லியிருக்க வேண்டும் என்று கூற அதற்கு ரம்யா, எனக்கே புரியவில்லை என்று கூறினார். அப்போது கமல், நீங்கள் தலைவர் என்பதால் அதை எப்படியாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறியது ரம்யாவை ரொம்பவே அப்செட் ஆக்கியது. ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி கமல்ஹாசனும் அவரது கேப்டன்சியை குறை கூறியதை அவர் எதிர்பார்க்காததால் அவர் அதிர்ச்சி அடைந்தது அவரது முகத்தில் இருந்து தெரிய வந்தது.இதை பார்த்த ரசிகர்கள் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


 

null


 

Similar News