பிக்பாஸ் ப்ரோமோ: கமல் சொன்ன சீக்ரெட் - ஆனந்த கண்ணீர் வடித்த அர்ச்சனா, ஏன் தெரியுமா.?
பிக்பாஸ் ப்ரோமோ: கமல் சொன்ன சீக்ரெட் - ஆனந்த கண்ணீர் வடித்த அர்ச்சனா, ஏன் தெரியுமா.?;
பிக்பாஸ் நிகழ்ச்சி 62 நாட்களை கடந்த இன்று 63வது நாளை கடக்குப் போகும் நிலையில் முதல் நாளிலிருந்து பல பிரச்சினைகளும், வாக்குவாதங்களும், சண்டைகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்தவகையில் கடந்த வாரம் வரை சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சம்யுக்தா போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
எனவே இந்த வாரத்திற்கு ஏழு நபர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி மற்றும் ரம்யா அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டனர். தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களிடம் ஹெல்த் டாஸ்க் பற்றி பேசினார்.
அப்போது நிஷா காப்பாற்றப்பட்டார் என்ற சீக்ரட்டையும் அவர் உடைத்தார். இதை கேட்ட நிஷா ஷாக் ஆக, அர்ச்சனா எமோஷனல் ஆகி கண் கலங்கினார். நிஷா மீண்டும் கிடைத்துவிட்டார் என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குறைவான வாக்குகள் பெற்று சனம் வெளியேறுவார் என்று தெரியவருகிறது இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.