பிக்பாஸ் ப்ரோமோ : அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் - உண்மையை கூறிய பாலாஜி.!

பிக்பாஸ் ப்ரோமோ : அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் - உண்மையை கூறிய பாலாஜி.!;

Update: 2020-11-24 15:48 GMT

பிக்பாஸ் சீசன்-4ல் இன்றைய ப்ரோமோ வெளியானது. அனைவருக்கும் ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. அதில்  கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கால்செண்டர் ஊழியர்களாக ரம்யா, சம்யுக்தா மற்றும் பாலாஜி ஆகியோர் இருக்க அவர்களிடம் சக போட்டியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் கேள்விகள் கேட்பதற்கு எந்த விதமான வரைமுறையும் இல்லை என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

 இதனை அடுத்து  பாலாஜிக்கு அர்ச்சனா  போன் செய்வதின் மூலம் உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்களை முன் வைத்து விளையாடுகிறீர்கள் என்று நீங்கள் கூறினீர்கள். அவர்கள் பெயர்களை தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியபோது பாலாஜி ஓபனாக முதலில் நீங்கள் முன்னிறுத்தி விளையாடுவது சோம், இரண்டாவதாக ரியோ, மூன்றாவதாக கேபி என்று பதில் கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், அதை வெளிக்காட்டாமல் சிரிப்பது போன்று புரோமோ முடிந்தது. மேலும் அர்ச்சனாவின் கைவசம் உள்ளவர்கள் யார் யார் என்பது நமக்கும் தெரியும் என்றாலும் அதை ஓப்பனாக பாலாஜி கூறியது பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இன்றைய நிகழ்ச்சி சண்டையோடும்,  வாக்குவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News