#BigBossPromo - பாலாவின் கேள்விக்கு ஆரி பதில் சொல்லுவாரா??

#BigBossPromo - பாலாவின் கேள்விக்கு ஆரி பதில் சொல்லுவாரா??;

Update: 2020-12-01 19:25 GMT
பிக்பாஸ் இன்றைய நிகழ்ச்சி

58-வது நாள் முடிவடையும் நிலையில், பல்வேறு பிரச்சினைகளும், வாக்குவாதங்களும், பல திருப்பங்களுடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் பாலா ஆரியை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்பது போல் இருக்கிறது.  பாலாவுக்கும் ஆரிக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால். இன்றைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.நேற்றைய நிலையில்  ஒருவருக்கொருவர் நாமினேட் செய்யப்பட்டனர் அந்த வகையில்  அனிதா, ஆரி, ரம்யா பாண்டியன், சனம், நிஷா ஆகியோர்  நாமினேட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது புரோமோ:பாலாவின் தந்திரத்தை புரிந்து கொண்டதாக சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி விளக்குகிறார். கால்சென்டர் டாஸ்க் என்றால் காலர் கேள்வி கேட்கவேண்டும், கால் சென்டர் ஊழியர் பதிலளிக்க வேண்டும். ஆனால் பாலாஜி கேள்வி எதையுமே முன்வைக்கவில்லை. என்னைப்பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்து வைத்தார். இதன் மூலம் தன்னுடைய கருத்து மட்டும் வெளியே தெரிய வேண்டும், அதுவும் எனக்கு எதிராக அந்த கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பாலாஜியின் நோக்கம் என்று சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி கூறினார்.இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் இது குறித்து கூறிய பாலாஜி, ஆடியன்ஸ்களுக்கு எனக்கும் அவருக்கும் இடையே என்ன சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக நான் இந்த டாஸ்க்கை பயன்படுத்திக் கொண்டேன் என்றும் என்னுடைய கான்செப்ட் இது ஒன்றுதான் என்றும் பாலாஜி கூறுகிறார் என்பது போல ப்ரமோ முடிந்தது. இதுபற்றிய முழு தகவலையும் என்ற நிகழ்ச்சியில் பார்த்தால்தான் தெரிய வரும் என்று பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News