பிக்பாஸ்: டாஸ்க்கில் சரமாரியாக அடித்துக் கொள்ளும் ரம்யா மற்றும் ஷிவானி!
பிக்பாஸ்: டாஸ்க்கில் சரமாரியாக அடித்துக் கொள்ளும் ரம்யா மற்றும் ஷிவானி!;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல விதமான பிரச்சினைகளும் சண்டைகளும் நடைபெற்று தான் வருகிறது அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஃபினாலே டாஸ்க்கில் முதல் இடம் பிடித்து எவிக்சனில் இருந்து தப்பிக்க வேண்டும், இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு போட்டியாளரும் கடுமையாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோ வீடியோவில் ரம்யா மற்றும் ஷிவானி இடையே கடுமையான போட்டி நடக்கிறது. ஒரு கையில் கயிறை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பந்துகளை எடுத்து எதிராளியை தாக்க வேண்டும் என்பதுதான் இந்த டாஸ்க் என தெரிகிறது. இதில் ஷிவானி மிக அபாரமாக விளையாடி வருவதாக தெரிகிறது. பயங்கர சோர்வாக இருந்த போதிலும் அவர் ஒரு கையில் கயிறை பிடித்துக்கொண்டு மறு கையில் பந்தை எடுத்து ரம்யா மேல் வீசி வருகிறார்.
ரம்யாவும் ஷிவானிக்கு இணையாக விளையாடி வருகிறார் என்பதும், பின்னணியில் சிங்க பெண்ணே பாடல் ஒலிப்பதும் மற்ற போட்டியாளர்கள் ஷிவானி, ரம்யா ஆகிய இருவரையுமே உற்சாகப்படுதி வருவதுமான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த டாஸ்க்கில் வெற்றிபெறுபவர் யார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#Day96 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/gdCBfyyhYH
— Vijay Television (@vijaytelevision) January 8, 2021