பிக்பாஸ் குறும்படம்: சம்யுக்தா முகத்திரை கிழியுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
பிக்பாஸ் குறும்படம்: சம்யுக்தா முகத்திரை கிழியுமா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!;
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55-வது நாட்களை கடந்து வந்துகொண்டிருக்கும் போட்டியாளர்கள், பிக்பாஸ் முதல் நாளிலிருந்தே பல்வேறு பிரச்சினைகளையும், வாக்குவாதங்களையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த வாரம் போட்டியாளர் அனைவருக்கும் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு கால்சென்டர் ஊழியரிடம் பேசும்படியாக இருந்தது. அதில் குறிப்பாக சனம் சம்யுக்தாவிடம் பேசும்போது ஆரியை குறித்து வளர்ப்பு சரியில்லை என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆரி மற்றும் சம்யுக்தா இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்று வந்த இரண்டாவது புரோமோவில் கமல்ஹாசன், சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படம் போட்டு காட்டுகிறார். "வளர்ப்பு சரியில்லை" என்று சம்யுக்தா கூறியதை சுட்டிக்காட்டிய கமல், ஆரி கூறியது உங்கள் தாய்மையை குறித்து அல்ல என்று தான் எனக்கு தோன்றியது, ஒரு குறும்படம் பார்ப்போம் என்று கூறிய கமல், இது குறும்படமும் அல்ல, அர்ச்சனா கூறியது போல் குருமா படமும் அல்ல, படம் என்று கூறி சம்யுக்தாவுக்கு ஷாக் கொடுத்ததோடு அர்ச்சனாவையும் போகிற போக்கில் கலாய்த்தார்.
மேலும் இந்த சீசனின் முதல் குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அர்ச்சனா குரூப் செய்து வரும் அன்பு அட்டாகசங்களுக்கும் குறும்படம் வேண்டும் என பார்வையாளர்கள் கமல்ஹாசனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் குறும்படம் இருக்குமா என்றும் பார்ப்போம் இன்றைய நிகழ்ச்சியை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.