பிக்பாஸ்: இவர் தான் ஜெயிக்க வேண்டும் சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு..!

பிக்பாஸ்: இவர் தான் ஜெயிக்க வேண்டும் சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு..!;

Update: 2020-12-03 15:28 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி பல சுவாரசிய நிகழ்வுடன் நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறியவர் சம்யுக்தா.இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது அவரது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

எனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சம்யுக்தா முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் நமக்கு தெரியாத பல தகவல்களை அவர் கொடுத்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக விளையாடினாலும் கடைசியில் ஜெயிக்க முடியாது என்று யாரை நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அவர் 'ஆஜித் சரியாக விளையாடுகிறார், ஆனால் அவர் ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம்" என்று கூறுகிறார்.

பிறகு ரம்யாவும் சரியாக விளையாடுகிறார், அவருக்கும் ஜெயிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். இவர் பதிவிட்டுள்ள கருத்துக்கு நெட்டிசன்களும்,பிக்பாஸ் ரசிகர்களும் ஆரி ஜெயிப்பார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News