பிக்பாஸ்: குவிந்து கிடக்கும் பல பிரச்சினைகள் விளக்கம் தருவாரா கமல்.!
பிக்பாஸ்: குவிந்து கிடக்கும் பல பிரச்சினைகள் விளக்கம் தருவாரா கமல்.!;
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 54 நாட்களை கடந்து பல்வேறு பிரச்சினைகளையும், வாக்கு வாதங்களையும் சந்தித்து வருகின்றனர். தற்போது வந்த நாட்கள் வரை கமல்ஹாசன் தவறு செய்யும் போட்டியாளர்களை இதுவரை கடுமையாக கண்டிக்கவில்லை என்றும், அவர் அறிவுரை என்ற பெயரில் டிப்ஸ் மட்டுமே கொடுத்து வருகிறார் என்பது பார்வையாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் ஏராளமான பிரச்சினைகளும், சண்டைகளும் இருந்தன. மேலும் முக்கிய பிரச்சினையாக ஆரி தன்னுடைய தாய்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம்சாட்டிய சம்யுக்தா குறித்து இன்று கமல் விசாரிக்க வாய்ப்பு உள்ளது என பலரும் அவர்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அதனை அடுத்து இந்த நிலையில் இந்த வாரம் ஏகப்பட்ட பிரச்சனைகள் கமல் முன் இருப்பதால் அந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய நிலையில் அவர் உள்ளார். ஆரி தன்னுடைய தாய்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம்சாட்டிய சம்யுக்தா குறித்து இன்று கமல் விசாரிக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சம்யுக்தாவின் சர்ச்சைக்குரிய வார்த்தையான ’வளர்ப்பு சரியில்லை’ என்பது குறித்தும் ஆரி பிரச்சனையை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆரி மற்றும் பாலாஜி சண்டையின் போது ‘வேறு ஒன்றை நீட்டி பேசுவேன்’ என்று பாலாஜி கூறியதும், ‘நீ ஆம்பளையா இருந்தா’ என ஆரி கூறியதும் இந்த வார பஞ்சாயத்துக்களில் ஒன்றாகும். அது தவிர அனிதா, சனம் நட்பு குறித்து ரியோ பேசியது, கேப்டன் ரியோவே ஒரு விதியை உருவாக்கி அந்த விதியை அவரே மீறியது உள்பட பிரச்சினைகளை கேட்பார் என தெரியவருகிறது.இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அவரது கருத்துக்களை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.