நடிப்பின் பல்கலைக்கழகம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளில் போற்றும் அண்ணாமலை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளானது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அவருக்கு 93 வயதாகிறது. அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.;

Update: 2021-10-01 05:43 GMT

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளானது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அவருக்கு 93 வயதாகிறது. அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திரை உலகின் தனிப்பெரும் புதையல், சூரக்கோட்டை தந்த சிம்மக்குரல் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பியல் துறையின் பல்கலைக்கழகம். அவர் புருவங்கள் கூட பேசும் வசனம், மீசை துடிக்கும் அதுவும் நடிக்கும். தமிழகம் கொண்டாடும் தனிப்பெரும் நாயகன் பிறந்த 93வது நன்னாளில் அவர் புகழை போற்றுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Bjp Tn President Annamalai Twiter


Tags:    

Similar News