கருப்பன் குசும்புகாரன் தவசிக்கா இந்த நிலைமை.. வீடியோ வெளியிட்டு கதறல்.!
கருப்பன் குசும்புகாரன் தவசிக்கா இந்த நிலைமை.. வீடியோ வெளியிட்டு கதறல்.!;
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் குறிச்சொல்லும் கோடாங்கியாக பெரிய மீசையுடன் நடித்த நடிகர் தவசி ஆவார். இவர் தற்போது புற்றுநநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இவர் ரஜினி முருகன் படத்தில் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக நடித்திருப்பார். அழகர் சாமியின் குதிரை படத்தில் உள்ளூர் கோடாங்கியாகவும் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தவர்தான் நடிகர் தவசி.
கொரோனா தொற்று ஊரடங்கிற்கு முன்னர் வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டிருந்தபோது விபத்து ஒன்று ஏற்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கால் படப்பிடிப்பு இன்று வீட்டில் முடங்கி வந்தார். இடையில் புற்று நோய் தீவிரம் அடைந்ததால் தவசியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மெலிந்து மீசையின்றி மிகவும் பரிதாபமான காட்சியில் தென்பட்டார்.
நல்ல கம்பீரமான மீசையுடன் சினிமாவில் வலம் வந்தவர் மீசையின்றி மொட்டை அடித்த நிலையில் காணப்பட்ட வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். தனக்கு சக நடிகர்கள் உதவும்படி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நடிகர், நடிகைகள் மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனும் புகையிலையை தவிர்த்து உணவு பழக்கம் வழக்கத்தை முறையாக கடை பிடித்து வந்தால் இது போன்ற நோய்கள் தாக்காது. சரியாக உடல்நலனில் அக்கறை காட்டவில்லை என்றால் இது போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள்.