லயனுக்கும், டைகருக்கும் பிறந்தவன்! - 'லைகர்' ட்ரைலர் எப்படி இருக்கிறது?
குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
குத்துச்சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'லைகர்' இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் தெலுங்கு என மொத்தம் 5 மொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகிறது.
ஒரு சாதாரண இடத்திலிருந்து கதாநாயகன் இந்திய அளவில் குத்துச்சண்டை வீரராக எப்படி உயர்ந்தார் என்பதை கதைக்களமாக கொண்டு உருவாக்கிய 'லைகர்' படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக வைரல் ஆகி வருகிறது, நேற்று வெளியான இந்த ட்ரெய்லர் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கி உள்ளது.