வசூல் சக்கரவர்த்தியான டாம் குரூஸ் - டைட்டானிக் சாதனையை முந்தினார்

டாம் குரூஸ் நடிப்பில் வெளியான 'டாப்கன் மேவரி' திரைப்படம் உலகெங்கும் 1.3 பில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Update: 2022-08-09 11:29 GMT

டாம் குரூஸ் நடிப்பில் வெளியான 'டாப்கன் மேவரி' திரைப்படம் உலகெங்கும் 1.3 பில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.




 


டாம் குரூஸ் நடிப்பில் வெளியான 'டாப்கன் மேவரி' உலகளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், உள்நாட்டு வசூல் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த டைட்டானிக் பின்னுக்கு தள்ளி சாதனையை முறியடித்துள்ளது.


 



மேலும் 'டாப்கன் மேவரி' இதுவரை அமெரிக்காவில் மட்டும் 662 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி உள்ளது. சுமார் 120 மில்லியன் டாலர் செலவில் தயாரான இந்த படம் தற்பொழுது உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News