இனி எங்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி - போர்கொடி தூக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் !

Cinema News.

Update: 2021-09-02 09:00 GMT

"ஓ.டி.டி'யில் வெளியான படங்களை பின்னர் தியேட்டர்களில் வெளியிட அனுமதிப்பதில்லை" என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.




 


கொரோனோ தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகள் சரிவர இயங்காமல் இருந்தன. இதனால் வெளியீட்டுக்கு தயாரான படங்கள் முடங்கியே கிடந்தன. இந்நிலையில் படங்களை முடக்கி விடாமல் காப்பாற்ற தயாரப்பாளர்கள் ஓ.டி.டி தளங்களை நோக்கி நகர துவங்கினர். இதற்கிடையில் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் புதிய படங்களை ஓ.டி.டி தளங்களில் படம் திரையரங்கில் வெளியான 50 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.




 


இதனைதொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த முடிவு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஓ.டி.டி'யில் வெளியான படங்களை பின்னர் தியேட்டர்களில் வெளியிட அனுமதிப்பதில்லை, ஓ.டி.டி'யில் விற்கப்படும் படங்களுக்கு பிரிவியூ காட்சிகளுக்குத் தியேட்டர்களைக் கொடுக்க மாட்டோம், தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிடுவோம் என அவர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், ஓ.டி.டி'க்கென தனியாக படங்களைத் தயாரித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை" எனவும் தெரிவித்துள்ளார்களாம்.

Tags:    

Similar News