எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கிய யூ ட்யூப் சேனல் - உண்மைகள் வெளிவருமா ?

Cinema News.

Update: 2021-08-24 10:45 GMT

இனி யூ ட்யூப் சேனல் மூலம் ரசிகர்களிடம் பேச இருக்கிறேன் என இயக்குனரும், நடிகர் விஜய்'யின் தகப்பனாருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.




 


பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ‛யூ-டியூப்' சேனல் ஒன்றை துவக்கியுள்ளார். இதில் அவரது வாழ்க்கை அனுபவங்களை அனைத்தையும் பகிர்ந்துகொள்ள உள்ளார்.




 


இது குறித்து கூறிய அவர், "கொரோனாவால் சினிமா உலகமே இருண்டு விட்டது. என்னை நான் எப்போதுமே புத்துயிராக வைத்துக் கொள்ள சினிமா மூலம் உங்களுடன் பேசி வந்த நான், இனி இந்த சேனல் மூலம் பேச உள்ளேன். இதுவரை 70 படத்தை இயக்கியுள்ளேன். பலரை அறிமுகப்படுத்தியுள்ளேன். சாதிக்க நினைக்க உள்ள இளைஞர்களுக்கு என் வாழ்க்கை பாடமாக இருக்கும்" என கூறியுள்ளார்.

Similar News