தள்ளிப்போகிறதா ஷங்கர் - ராம்சரண் இணையும் பான்-இந்தியா படம் !

Cinema News.

Update: 2021-08-24 10:45 GMT

தள்ளிப்போகிறது ஷங்கர் - ராம்சரண் இணையும் பான் இந்தியா படம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.




 


இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கர் அடுத்தபடியாக நடிகர் ராம் சரணை வைத்து பான்-இந்தியா படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் தற்பொழுது தள்ளிப்போய் உள்ளது.




 


அதற்கு காரணம், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் சில விடுபட்ட காட்சிகளை எடுப்பதற்காக ராம் சரணிடம் 20 நாட்கள் வேண்டுமென இயக்குனர் ராஜமவுலி கேட்டுள்ளாராம். மேலும், சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்திலும் ராம் சரண் நடிக்க வேண்டியுள்ளதாம். அந்த படப்பிடிப்புகளை முடித்த பிறகு தனது படத்தை ஆரம்பிக்கலாம் என ஷங்கர் சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News