பிரபல இசையமைப்பாளர் மணிசர்மா'வின் மகனுக்கு சிரஞ்சீவி வாய்ப்பளித்துள்ளார்.
தமிழில் ஷாஜகான், யூத், போக்கிரி என விஜய் நடித்த பல படங்களில் இசையமைந்தவர் இசையமைப்பாளர் மணிசர்மா, இவரின் மகன் மஹதி ஸ்வர சாகரை இசையமைப்பளாராக உருவாக்கி சில படங்களுக்கு இசையமைக்க வைத்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு முதன்முறையாக ஜாக்பாட் பரிசாக சிரஞ்சீவியின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வேதாளம் படத்தின் ரீமேக்காக சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'போலா சங்கர்' என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் மஹதி ஸ்வர சாகர்.