சர்வதேச அளவில் விருது வென்ற மகிழ்ச்சியில் மகிமா நம்பியார் !
Breaking News.;
ஸ்பெயினில் நடந்த மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்காக மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த படம் 'மகாமுனி', ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து மகிமா நம்பியார் தனது டுவிட்டர் பதிவில், "மகாமுனி படத்தில் நடித்ததற்காக மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை. படத்தின் இயக்குனர் சாந்தகுமாருக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.