12 வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றிய உண்மையை உடைத்த செல்வராகவன் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-19 10:00 GMT
12 வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றிய உண்மையை உடைத்த செல்வராகவன் !

12 வருடங்களுக்கு பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.




கடந்த 2009'ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்', சோழர்களின் வரலாற்று தொடர்ச்சி, புதையல், பாண்டியர்களின் பழிவாங்கல் என புனைவு கதையை திரைக்கதையாக்கி படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் செல்வராகவன். வழக்கம் போல படம் வெளிவந்த உடன் படத்தை பற்றி எதிர்மறை விமர்சனங்களே வந்தது பின் வருடங்கள் செல்ல செல்ல படத்தை பற்றி புகழ துவங்கினர்.




 


தற்பொழுது தனது ட்விட்டர் பதிவில் ஆயிரத்தில் ஒருவன் பற்றி கூறியுள்ளார். அதில், "ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால், அதை ஒரு மெகா பட்ஜெட் படம் என உயர்த்திக் காட்டுவதற்காக 32 கோடி பட்ஜெட் என அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம். படத்தின் உண்மையான பட்ஜெட்டை படம் வசூல் செய்திருந்தாலும், அது ஆவரேஜ் வசூல் என்று தான் சொல்லப்பட்டது. என்ன முரண்பாடு இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News