‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசை நாளை வெளியீடு! நடிகை சித்ரா பெற்றோர் பங்கேற்பு!
‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசை நாளை வெளியீடு! நடிகை சித்ரா பெற்றோர் பங்கேற்பு!;
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன்னர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை நாளை வெளியிடப்படும் என அப்படக்குழு தெரிவித்துள்ளது.
அனைவரின் மனதிலும் சின்னத்திரை மூலமாக சித்ரா இடம் பிடித்துள்ளார். அவர் நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் பெண்கள் முதல் இளைஞர்கள் வரை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கால்ஸ் என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சபரீஷ் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது.
இந்நிலையில், நாளை காலை 9 மணியளவில் ‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசையும், டிரைலரும் வெளியிடப்பட்வுள்ளது. இதனை சித்ராவின் பெற்றோர்கள் வெளியிடுகிறார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் படத்தின் கதை எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.