கவலைகிடமான நிலையில் பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள் - யார் அவர்.?

கவலைகிடமான நிலையில் பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள் - யார் அவர்.?

Update: 2020-11-28 18:23 GMT

தமிழ் சினிமாவில் சில நாட்களுக்கு முன்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் நடித்திருந்த நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு வராத மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சின்னத்திரை நடிகை சிரியசாக இருப்பது என்ற செய்தி வந்துள்ளது.
 

தமிழ் சினிமாவில் பல துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் கௌசல்யா செந்தாமரை.இவர் சில  வருடங்களாக  வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் நடிக்க களம் இறங்கினார்.அந்தவகையில் பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோர் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் பாட்டி வேடத்தில் நடித்தவர் கௌசல்யா செந்தாமரை.

இவர் தற்போது உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் நடிகை கவுசல்யா செந்தாமரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை சரியானதும் மீண்டும் நடிப்பில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar News