சூர்யா தயாரிக்கும் படத்தில் ரம்யாவை அடுத்து இணைந்த பிரபலம்..! யார் தெரியுமா..?

சூர்யா தயாரிக்கும் படத்தில் ரம்யாவை அடுத்து இணைந்த பிரபலம்..! யார் தெரியுமா..?

Update: 2021-01-31 17:35 GMT

நடிகர் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில்   பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக பிரபல நடிகை இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தவகையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், பூஜையில் பிரபல நடிகை வாணி போஜன் கலந்து கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் வாணிபோஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர்  கமிட்டாகி உள்ள முதல் படம் என்பதால் ரசிகர் அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

சூரியா தயாரிக்கும் நிறுவனமான இப்படம்  விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், இப்படத்திற்கான  மேலும் சில முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News