சிம்புவிற்கு வில்லனாகும் பிரபல பட 'இயக்குனர்': யார் தெரியுமா.?

சிம்புவிற்கு வில்லனாகும் பிரபல பட 'இயக்குனர்': யார் தெரியுமா.?;

Update: 2021-01-28 18:00 GMT

தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் தன் நடிப்பின் பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிம்பு. அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.இந்நிலையில் ஈஸ்வரன்  திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் 'மாநாடு' என்ற படத்தில் நடித்து வருகிறார்  இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.

சமீபத்தில் நடிகர் சிம்பு 'பத்து தல' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்  என்றும் இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா என்பவரும் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்துல தல என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கரும்,கௌதம் கார்த்திக்கும் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. எனவே இன்று வந்த தகவலின் படி படத்தின் வில்லன் கேரக்டரில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கிறார் என்று  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


 

சிம்பு நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் இயக்குனர் தற்போது  சிம்புவிற்கே வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களிடையேவும், ரசிகர்களிடையேவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News