அருண் விஜயின் சினம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் - என்ன தெரியுமா??

அருண் விஜயின் சினம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் - என்ன தெரியுமா??

Update: 2021-01-26 17:37 GMT

ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். தற்போது இவர் நடித்து முடித்து புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படம் 'சினம்'. இப்படத்தின் இயக்குனர் ஜி.என் குமரவேலன், மற்றும் இசையமைப்பாளர் ஷபீர்.மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாலாஜி, பாலக் லால்வானி,காளி வெங்கட், கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

சமீபத்தில் சினம் படத்தின் டீசர் வெளியாகி அந்த டீசரில் "தப்பை கண்டு ஒவ்வொருத்தருக்கும் கோபம் வர வேண்டும் அவ்வாறு கோபம் வந்தால் தான் தப்பு செய்றவன் பயப்படுவான், பயப்படனும்" என்று அருண் விஜய் கூறிய வசனம் மிகவும் வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தை தற்போது பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அருண் விஜய் கைவசம் உள்ள படங்கள் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் மற்றும் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜய் 31 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் ஹரி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன்  படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News