"பிரின்ஸ்" மற்றும் "சர்தார்" திரைப்படங்களின் சென்சார் தகவல் மற்றும் ரன் டைம்

தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" மற்றும் கார்த்தி நடிப்பில் "சர்தார்" என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகிறது.

Update: 2022-10-12 13:34 GMT

தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" மற்றும் கார்த்தி நடிப்பில் "சர்தார்" என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களுமே தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னர் அக்டோபர் 21 அன்றே திரைக்கு வருகிறது.


 



தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனின் வழக்கமான் பாணியில் காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது. தணிக்கையில் "U" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இரண்டு மணிநேரம் இருபத்து மூன்று நிமிடம் படத்தின் நீளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 



கார்த்தி நடிப்பில் "சர்தார்" முழுநீள ஆக்ஷன் திரைப்படம், கார்த்தி தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சர்தார் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் தணிக்கையில் "U/A" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரம் நாற்பத்தாறு நிமிடம் படத்தின் நீளம்.

இந்த இரண்டு திரைப்படங்களுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் (தி ராக்) நடிக்கும் "பிளாக் ஆடம்" வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News