படப்பிடிப்பில் விபத்து சேரனுக்கு தலையில் பலத்த காயம் !

படப்பிடிப்பில் விபத்து சேரனுக்கு தலையில் பலத்த காயம் !

Update: 2021-08-06 02:30 GMT

படப்பிடிப்பில் இயக்குனர் சேரனுக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்துள்ளது.




 


இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.




 


இப்படத்தின் படப்பிடிப்பின் போது சேரன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தலையில் அதிகமாக அடிபட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபின் அங்கு அவருக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திள்ளனர்.


Source - மாலை மலர்

Similar News