ரஜினி ரசிகரின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்.!

ரஜினி ரசிகரின் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்.!

Update: 2020-10-20 13:02 GMT

#NewsUpdate

கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தன் திருமணத்துக்காக, ரஜினி புகைப்படத்துடன் ''இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை'' என்ற வாசகத்துடன் கூடிய அழைப்பிதழை அச்சிட்டு வழங்கி வருகிறார். ரஜினி கட்சி தொடங்கப்போவதாக பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார். ரசிகர்களும் ஆதரவாளர்களும் ரஜினி எப்போது கட்சியைத் தொடங்குவார் என்ற ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் தன் திருமணத்துக்காக, ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் அழைப்பிதழ் அச்சடித்து வினியோகித்து வருகிறார்.

Similar News