பிக்பாஸில் இருந்து இன்று வெளியாக போகும் நபர் அதிகாரப்பூர்வ தகவல்.!

பிக்பாஸில் இருந்து இன்று வெளியாக போகும் நபர் அதிகாரப்பூர்வ தகவல்.!;

Update: 2020-10-18 20:26 GMT

பிக்பாஸ் சீசன்-4 கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளனர். அந்த நிலையில் கடந்த வாரம் 16 போட்டியாளர்களில் ஐந்து நபர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். நேற்று கமலஹாசன் அவர்களால் ஷிவானி, ஆஜித் மற்றும் ரம்யா ஆகியோர் எவிக்சன் பட்டியலில் இருந்து நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






மீதமுள்ள இரண்டு நபர்களில் 'ரேகா' இன்று முதல்நபராக பிக்பாஸிலிருந்து வெளியேற போவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளன. மேலும் இன்று வந்த ப்ரோமோவில் இன்னும் சிலர் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டாமல் விளையாடி வருவதாக மக்கள் மட்டும் அல்ல, இவர்களுடன் விளையாடி வரும் சக போட்டியாளர்களும் கருதுகிறார்கள் என வந்தது. இன்று நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்று பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

Similar News