விஜய்சேதுபதி சிந்தித்து செயல்பட வேண்டும் : ஆர்.கே.சுரேஷ்.!
விஜய்சேதுபதி சிந்தித்து செயல்பட வேண்டும் : ஆர்.கே.சுரேஷ்.!;
இலங்கை கிரிக்கெட் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படத்தில் நடிக இருப்பதாக அறிவித்திருந்தார். முத்தையா முரளிதரன் இலங்கை தமிழ் குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் எப்பொழுதும் சிங்களர்களுக்கு தான் ஆதரவு தெரிவித்தார் என்பதாலும், இலங்கை உள்நாட்டு போரின் போது பல இலங்கை தமிழர்கள் கொள்ளப்பட்டனர். இதை அவர் வேடிக்கை பார்த்தார் என்பதாலும், அவரது படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பலர் தங்களது கண்டன குரலை பதிவு செய்து வந்தனர்.
நடிகர் விஜய்சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் என நடிகரும், பாஜக ஓபிசி துணைத்தலைவருமான ஆர்.கே.சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெற கூடிய ஆளுமையில் உள்ளதாகவும், அதிமுக, திமுக இல்லாத மூன்றாவது அணி உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.