பிரபல நடிகரின் மகள் இயக்குனராகிறார்?

பிரபல நடிகரின் மகள் இயக்குனராகிறார்?

Update: 2020-10-18 14:44 GMT

தமிழ் சினிமாவில் 90,80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவரின் மூத்த மகளாக வரலட்சுமி தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். தமிழ் 2012 ஆம் ஆண்டு வெளியான 'போடா போடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 20 படங்களுக்கு மேல் நடித்து தற்போது 8 படங்களில் நடித்து வருகிறார்






















இந்நிலையில் தற்போது நடிகையை அடுத்து இயக்குனராகவும் வரலட்சுமி மாறி உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்திற்கு "கண்ணாமூச்சி" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்குனராக அறிமுகமானதை அடுத்து பல முன்னணி நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதன்முதலாக இயக்குனராக பணிபுரியும் இந்த படத்தை திரில்லர் படமாகவும்,ஆக்ஷன் நிறைந்த படமாகவும் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனராக பணிபுரியும் படம் எப்படி இருக்கும் என்று பலர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Similar News