அஜித்திற்காக எழுதிய கதையில் விஐய் நடிக்கிறார்.?
அஜித்திற்காக எழுதிய கதையில் விஐய் நடிக்கிறார்.?;
தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று, அவரின் ரசிகர்கள் பலருக்கும் பல விதமான எதிர்பார்ப்புகள் இருந்தது.
மீண்டும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜயின் 65 ஆவது படத்தை நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கூறிய விரைவில் நடைபெறவிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், இது ஏறக்குறைய உறுதியானது தான். இந்நிலையில் விஜய்க்கு இந்த கதையை கூறுவதற்கு முன்,பல வருடங்களுக்கு, முன்பு இதே கதையை தல அஜித்துக்கு கூறியுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ்.
தல அஜித்திற்கு கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் கதையை சில மாற்றங்கள் செய்து தளபதி விஜய்க்கு கூறியுள்ளாராம் அந்த கதை அவருக்கு பிடித்து விட்ட காரணத்தினால் தளபதி 65-ல் நடிக்க இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.