ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தின் புதிய அப்டேட்.!
ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தின் புதிய அப்டேட்.!
நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள படம் 'பூமி' இத்திரைப்படம் இவரின் 25வது படமாகும். படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.ரோஹித் ராய்,சதீஷ்,தம்பி ராமையா,ராதாரவி,சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதையடுத்து முக்கிய அப்டேட் ஆக இன்று டி இமான் இசையில் உருவான 'கடைக்கண்ணால்' என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.