ரியல் ஹீரோவிற்கு சிலை வைத்த பொதுமக்கள்.!

ரியல் ஹீரோவிற்கு சிலை வைத்த பொதுமக்கள்.!;

Update: 2020-10-22 13:45 GMT

சினிமாவில் இவரைப்போல ஒரு நல்ல உள்ளத்தை பார்க்கவே முடியாது. அடுத்தடுத்த உதவிகள் செய்து வரும் நல்ல உள்ளம் கொண்டவர் சோனு சூட். இவர் செய்த உதவிகளை லிஸ்ட் போடவே முடியாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.




படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள மாணவ,மாணவிகளை அழைத்து வர தனது சொந்த செலவில் தனி விமானம் அமைத்து அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சாப்பாடு, பணம் இல்லாமல் தவித்த அவர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஒரு விவசாயி மாடு வாங்க பணம் இல்லாததால் தன் சொந்த மகளையே ஏரில் பூட்டி உழுது வந்தார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் பரபரப்பானது அதை பார்த்து சோனு சூட் அவர்களுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். இதுபோல் இன்னும் பல உதவிகளை செய்து வந்துள்ளார்.அந்த வகையில் இவருக்கு 'சிறப்பு மனிதநேய செயலுக்கான' விருது ஐ.நா வழங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது சோனு சூட் செய்த உதவிகள் அனைத்தையும் சிலையாக வடிவமைத்து துர்கா பூஜா குழுவினர் சோனு சூட்டின் உதவிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

Similar News