நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம்: எப்பொழுது ரிலீஸ்.?

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம்: எப்பொழுது ரிலீஸ்.?;

Update: 2020-10-22 13:47 GMT

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு நெறி முறையை பின்பற்றி தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, ஆர்.ஜே.பாலாஜி,ஊர்வசி, அஜய் கோஷ்,இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் கொரோனா ஊரடங்கில் திரையரங்கங்கள் திறக்கப்படாத நிலையில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் OTT தளங்களில் வெளியாகி வந்தன.

இது போல நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளன. இதை அறிந்த ரசிகர்கள் இது தீபாவளி விருந்தாக நமக்கு இருக்கும் என்று பலர் பல கமெண்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

Similar News