பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் எவை.?
பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் எவை.?;
பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் கொரோனா காரணமாக பல மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் தியேட்டர்கள், பல மாநிலங்களில் திறக்க அனுமதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்று வரை தியேட்டர்கள் திறக்கப்படாமல் தான் இருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது ஒரு தியேட்டரில் 10 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் மீண்டும் தியேட்டர்கள் மூடி விட்டனர். இதைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் மொத்த படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் ஆகிய படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடித்துள்ள 'காடன்' படம், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்,விஜய்,சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகாது என்ற செய்தி அறிந்த ரசிகர்கள் மிகவும் வருத்ததுடன் இருக்கின்றனர்.