பிக்பாஸில் பாலாவிற்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்.!
பிக்பாஸில் பாலாவிற்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்.!;
பிக்பாஸ் சீசன்-4 தொடங்கிய நாள் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல பிரச்சினைகள் சண்டைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதை பார்த்து ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
அதன்படி இன்று வந்த ப்ரோமோவில் முதல் டாஸ்க்கே சற்று வித்தியாசமாக இருந்தது. இது நாள் வரை, உள்ளே நடந்த சம்பவங்களை வைத்து, யார் அடுத்த வாரம் வெளியேறும் போட்டியாளர் என்பதை அவர்களே வரிசை படுத்த கூறினர். அதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு வேண்டாதவர்களை தேர்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவாக நிஷா, சோம், அர்ச்சனா உள்ளிட்டோர் பாலா அதிக கோவப்படுவதாக கூறி அவரது பெயரை கூறுகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலா நிஷா நீங்கள் நேற்று நடந்த டாஸ்க்கில் கோபம் பட்டால் தான் மனுஷன் என்று கூறினீர்கள், அப்போ ஏன் கோபப்பட்டால் தப்பு என என் பெயரை கூறினீர்கள் என்று கூறினார்.
இந்த பிரச்சினையின் நடுவில் எப்பொழுதும் நாட்டாமை பண்ணும் அர்ச்சனா இந்த விவாதத்திலும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது போல ப்ரோமோ முடிந்தது. இதை பார்த்து ரசிகர்கள் இன்று பல சுவாரஸ்யமான நிகழ்வு இருக்கின்றது என்றும் பல பிரச்சினைகள் உள்ளன என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.