திரௌபதி இயக்குநரின் அடுத்த படைப்பு ருத்ரதாண்டவம் - மிரளும் நாடக காதல் கும்பல்.!
திரௌபதி இயக்குநரின் அடுத்த படைப்பு ருத்ரதாண்டவம் - மிரளும் நாடக காதல் கும்பல்.!;
பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கிய மோகன் ஜி, திரௌபதி என்ற படத்தை இயக்கினார். இந்தப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக இருந்தது. இது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு பின்னர் நாடக காதல் கும்பல்களின் ஒட்டுமொத்த உண்மையும் ஒரே கதையில் வெளியே கொண்டு வந்தார். இதற்கு பாமக, பாஜகவினர் வெளிப்படையாக தங்களின் ஆதரவை தெரிவித்தனர். ஒரு பக்கம் திரௌபதி படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நயவஞ்சகர்களின் தடையை மீறி திரையில் மிரட்டினாள் திரௌபதி என்றே சொல்லலாம்.
இந்நிலையில், திரௌபதி வெற்றியை தொடர்ந்து தற்போது ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகள் தற்போது தயாராகி கொண்டுள்ளது என்று மோகன் ஜி, தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் பல வகையான குறியீடுகள் உள்ளன.
படத்தின் கதை எப்படி இருக்கும் என்று தற்போது இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவன் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன் ஜி, தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்து மத பெண்களை வைத்தே அரசியல் பண்ணுற உங்களை எல்லாம் வெள்ளித்திரையில் தோலுரிப்பது தப்பே இல்ல... செய்யும் வினைக்கு எதிர் வினை எப்போதும் உண்டு.. இன்று நீ விதைத்த வினைக்கு விரைவில் அறுவடை இருக்கு.. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பல அர்த்தங்கள் அடங்கியுள்ளது. தற்போது எடுக்கப்போகும் ருத்ரதாண்டவம் படத்தில் கண்டிப்பாக இந்து பெண்களை கேலியாக பேசுபவர்களின் முகத்திரை கண்டிப்பாக கிழியும் என்றே தோன்றுகிறது. அனைவரும் ருத்ரதாண்டவத்தை எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம்.