பிக்பாஸில் நாளை தொகுத்து வழங்கப் போகும் விஜய் பட நடிகை.?
பிக்பாஸில் நாளை தொகுத்து வழங்கப் போகும் விஜய் பட நடிகை.?;
தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலங்கள் ஆன நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார் நடிகை சமந்தா.
இன்று ஆயுத பூஜையை அடுத்து நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாளை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டுப் பண்டிகைகளும் பெண்களை முக்கியப்படுத்தியப் பண்டிகைகள் என்பதால் நடிகை சமந்தா நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் ஆண் நடிகர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா தெலுங்கில் தொகுத்து வழங்க இருப்பதற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதை அறிந்த தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எப்பொழுது நிகழ்ச்சி காண போகிறோம் என்று ஆவலாக இருக்கின்றனர்.
மேலும் தமிழ் பிக்பாஸ் ரசிகர்கள் இதுபோல் நமக்கும் பெண் நடிகைகள் தொகுத்து வழங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.