விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

Update: 2020-10-26 17:39 GMT

தமிழ் சினிமாவில் வாரிசுஅரசியல் இருப்பதாக பலர் கூறி வந்த நிலையில் அந்த வரிசையில் வந்தவர் தான் விக்ரம்பிரபு. விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லக்ஷ்மி மேனன். கதாநாயகியாக நடித்தார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.கும்கி படத்திற்கு பிறகு அதிக படங்கள் நடிக்க தொடங்கினார்.

தற்போது சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்,முத்தயையா இயக்கத்தில் இவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி உள்ளது.மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை கார்த்திக் செளத்ரி இயக்குகிறார்.

கதாநாயகியாக வாணி போஜன், வில்லனாக தனஞ்ஜெயா நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஸ்ரீதர், இசையமைப்பாளராக மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், எடிட்டராக வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர் அந்த வகையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

ஆனால் இதை பார்த்து விஜய் ரசிகர்கள் இப்படத்தின் போஸ்டர் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போலவே இருக்கு என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News