வலிமை படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
வலிமை படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!;
தமிழில் அஜித்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நடிக்கும் படங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கின்றன அந்த வகையில் ரசிகர்கள் அனைவராலும் இவர் அன்போடு 'தல' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
தற்போது தல அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது ஏற்கனவே தெரிந்ததே.
இந்நிலையில் அஜீத் நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வலிமை படத்தில் முக்கிய நபராக காமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய படக்குழுவினர் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர்.
அதன்படி 'வலிமை' பொங்கலுக்கு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.