ராகவா லாரன்ஸ், ஜிவி பிரகாஷ் இணையும் புதிய படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

ராகவா லாரன்ஸ், ஜிவி பிரகாஷ் இணையும் புதிய படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!;

Update: 2020-10-28 16:19 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.இவர் பல படங்களில் நடித்தும் இயக்கியும் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டவர்.

தமிழ் மட்டுமில்லாமல் இந்தி மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருப்பவர். அந்த வகையில் கடந்த ஒரு வருடமாக அக்ஷய்குமார் நடிப்பில் உருவான 'லட்சுமி பாம்' என்ற படத்தில் பிஸியாக இருந்தார். மீண்டும் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்க உள்ளார்.இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்தது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் தொடங்கியுள்ளனர்.

இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Similar News