ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சாந்தனு பட நடிகைக்கு கொரோனா உறுதி!
ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சாந்தனு பட நடிகைக்கு கொரோனா உறுதி!;
நாடு முழுவதும் கொரோனா தொற்று பல மாதங்களாகக் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.அந்த வகையில் பல முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டும், சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தும் மக்கள் பாதுகாப்பாக தங்களை காத்து வருகின்றனர். இத்தகைய தொற்றால் மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த 'கண்டேன்' படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் ராஷ்மி கவுதம்.இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தற்போது ராஷ்மி தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னிலையில் ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியில் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது, அதே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுதீர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஷ்மி கவுதமுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்னிலையில் சூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ராஷ்மி அவரது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.
மேலும் அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் வருவீர்கள் என கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.